சிஎஸ்கே அணியில் மட்டும் தொடக்க வீரராக விளையாடுவது ஏன்?: டு பிளெஸ்ஸி பதில்!

சிஎஸ்கே அணியிலிருந்து ஹஸ்ஸி வெளியேறிய பிறகு எனக்குள்ள ஒரே வாய்ப்பு..
சிஎஸ்கே அணியில் மட்டும் தொடக்க வீரராக விளையாடுவது ஏன்?: டு பிளெஸ்ஸி பதில்!

தில்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 8-வது முறையாக தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் சென்னை.

ஐபிஎல் 2019 ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ்-தில்லி கேபிடல்ஸ் அணிகள் இடையிலான குவாலிபையர் 2 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது தில்லி. ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். சென்னை தரப்பில் தீபக் சஹார் 2-28, ஹர்பஜன் சிங் 2-31, ரவீந்திர ஜடேஜா 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை தரப்பில் களமிறங்கிய வாட்ஸனும், டூபிளெஸ்ஸிஸும் இந்தமுறை பொறுப்புடன் விளையாடியதால் பவர்பிளேயில் சென்னை அணி விக்கெட் எதுவும் இழக்கவில்லை. 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 50 ரன்களுடன் டூபிளெஸ்ஸிஸும், 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களுடன் வாட்ஸனும் ஆட்டமிழந்தார்கள். 19 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து வென்றது சென்னை. 

இந்த வெற்றி மூலம் 8-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள சென்னை, வரும் 12-ம் தேதி ஹைதராபாத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மோதுகிறது. இரு அணிகளும் நான்காவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு, சிஎஸ்கே அணியில் மட்டும் தொடக்க வீரராகத் தான் விளையாடுவது ஏன் என டு பிளெஸ்ஸி கூறியதாவது:

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எப்போதும் 3-வது அல்லது 4-ம் நிலை வீரராகவே விளையாடியுள்ளேன். சிஎஸ்கேவுடன் தான் தொடக்க வீரராகக் களமிறங்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் அங்குதான் நான் விளையாட ஓர் இடம் உள்ளது. சுரேஷ் ரெய்னா ஆரம்பம் முதல் நெ.3 வீரராகவே விளையாடி வருகிறார். இன்னும் பல வருடங்களுக்கு அதே இடம்தான் அவருக்கு. தோனியும் சில நேரங்களில் 4-வதாக, 5-வதாகக் களமிறங்குவார்.

சிஎஸ்கே அணியிலிருந்து ஹஸ்ஸி வெளியேறிய பிறகு எனக்குள்ள ஒரே வாய்ப்பு, தொடக்க வீரராகக் களமிறங்குவதுதான். தென் ஆப்பிரிக்க அணியில் நான் 3-ம் நிலை வீரர். அதுதான் எனக்கான சிறந்த இடம். வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவது என்னுடைய ஆட்டத்திறனை அதிகப்படுத்தும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com