இன்று வரை முறியடிக்க முடியாத கேப்டன் தோனியின் சாதனைகள்!

ஒரு கேப்டனாக இன்றைக்கும் தோனி வசம் உள்ள சாதனைகள்...
இன்று வரை முறியடிக்க முடியாத கேப்டன் தோனியின் சாதனைகள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார்.

2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஒரு கேப்டனாக இன்றைக்கும் தோனி வசம் உள்ள சாதனைகள்:

* டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே.

* சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் தோனி. 332 ஆட்டங்கள் (2-வது இடத்தில் பாண்டிங் - 324 ஆட்டங்கள்). 200 ஒருநாள் ஆட்டங்களிலும் 72 டி20 ஆட்டங்களிலும் 60 டெஸ்டுகளிலும் கேப்டனாக இருந்துள்ளார் தோனி. 

* ஒருநாள் ஆட்டங்களில் 110 வெற்றிகளும் 74 தோல்விகளும் டி20 ஆட்டங்களில் 41 வெற்றிகளும் 28 தோல்விகளும் டெஸ்டுகளில் 27 வெற்றிகளும் 18 தோல்விகளும் பெற்றுள்ளார். 

* ஒரு கேப்டனாக அதிக டி20 ஆட்டங்களில் (41) வென்றவர் - தோனி. இன்றுவரை அந்தச் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அடுத்த இடத்தில் 39 வெற்றிகளுடன் உள்ளவர் - ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்கார் ஆஃப்கன்.

* ஒருநாள் ஆட்டங்கள் இன்றுவரை அதிக வெற்றிகள் கண்ட கேப்டன்களில் தோனிக்கு 2-ம் இடம். பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு 110 வெற்றிகள். இந்திய அளவில் அதிக ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி அடைந்தவர், தோனி.

* அதிக டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் - தோனி. 72 ஆட்டங்கள். 2-ம் இடத்தில் அயர்லாந்தின் போர்டர்ஃபீல்ட் - 56 ஆட்டங்கள். 

* 200 ஒருநாள் ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார் தோனி. இந்திய அளவில் முதல் இடம், உலகளவில் தோனிக்கு 3-ம் இடம். 

* ஒருநாள் ஆட்டங்களின் வெற்றி விகிதத்தில் சிறந்த இந்திய கேப்டனாக உள்ளவர் கோலி. 89 ஆட்டங்களில் 62 வெற்றிகள், 24 தோல்விகளுடன் 2.583 விகிதம் கொண்டுள்ளார். அடுத்த இடத்தில் தோனி - 1.486.

* ஒரு கேப்டனாக உலகக் கோப்பை ஆட்டங்களில் இரு தோல்விகள் மட்டுமே பெற்றுள்ளார் தோனி. 2011-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் 2015-ல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்க்கு எதிராகவும் தோல்விகள் கிடைத்தன. உலகக் கோப்பைப் போட்டிகளில் பாண்டிங்கும் கிளைவ் லாயிடும் மட்டுமே அதிக வெற்றி விகிதங்களைக் கொண்டுள்ளார்கள். டி20 உலகக் கோப்பையில் 20 வெற்றிகளும் 11 தோல்விகளும் அடைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com