திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ரயில் பயணிகள் ஓய்வு அறை

புதுச்சேரி, ஆக. 8: புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் ஓய்வு அறை கடந்த 3 மாதங்களாக திறப்பு விழாவுக்காக காத்துக் கிடக்கின்றன. புதுச்சேரி ரயில் நிலையம் கடந்த மூன்ற
திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ரயில் பயணிகள் ஓய்வு அறை

புதுச்சேரி, ஆக. 8: புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் ஓய்வு அறை கடந்த 3 மாதங்களாக திறப்பு விழாவுக்காக காத்துக் கிடக்கின்றன.

புதுச்சேரி ரயில் நிலையம் கடந்த மூன்றாண்டுகளாக பொலிவுடன் காட்சி அளித்து வருகிறது. பாமகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வேலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்கள் வந்து சேர்ந்தன.

புதிய ரயில்கள் பலவும் வந்தன. இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் நாராயணசாமியின் முயற்சியால் தொடர்ச்சியாக இந்த ரயில் நிலையம் பல்வேறு வசதிகளைப் பெற்று வருகிறது.

புதுச்சேரி சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ரயிலில் வரும் பயணிகள் தங்கி ஓய்வு எடுக்க அறைகள் தேவை என்று உணரப்பட்டு ரூ.80 லட்சம் மதிப்பில் அவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் அவை பயணிகளுக்கு அர்ப்பணிப்பதில் காலதாமதம் நடந்து வருகிறது. இந்த வசதியை இப்போது புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு ரயில்களை ஓட்டி வரும் டிரைவர்கள் மற்றும் வழிகாட்டிகள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்துள்ள ரயில்வே பொறியியல் பிரிவு ஏற்கெனவே ரயில்வே வர்த்தகப் பிரிவிடம் ஒப்படைத்து விட்டதாக ரயில்வே வட்டாரங்கள் கூறின. அறையின் வாடகை எவ்வளவு போன்றவை நிர்ணயம் செய்தபிறகுதான் பயணிகளுக்கு இவை அர்ப்பணிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் விரைவில் இந்த ஓய்வு அறைகள் திறக்கப்பட உள்ளதாக தனக்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறியுள்ளார்.

தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புதுச்சேரி ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண் 1,2, 3-ல் விரைவில் கூடுதலாக மேற்கூரைகள் அமைக்கப்போவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக நாராயணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ரயில் நிலையத்தில் கூடுதலாக 48 குடிநீர் குழாய்கள், ஒரு நீர் குளிர்விப்பான் அமைக்கப்பட்டுள்ளன.

பிளாட்பாரம் எண்-1 ஐ நீட்டிக்கும் பணி கூடிய விரைவில் தொடங்கும் என்றும், பயணிகள் தேவைக்கு இணங்க மேலும் பல வசதிகள் செய்து தர முடிவு செய்துள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com