குறைந்த காலத்தில் கோடீஸ்வரராகலாம்! குமிழ் மர வளர்ப்பிற்கு மாறி வரும் விவசாயிகள்

உளுந்தூர்பேட்டை, செப். 29: குறைந்த காலத்தில் கோடீஸ்வரராக மாற குமிழ் மர வளர்ப்பிற்கு அண்மைக் காலமாக விவசாயிகள் மாறி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள், விருத்தாசலம் வட்டம்
குறைந்த காலத்தில் கோடீஸ்வரராகலாம்! குமிழ் மர வளர்ப்பிற்கு மாறி வரும் விவசாயிகள்

உளுந்தூர்பேட்டை, செப். 29: குறைந்த காலத்தில் கோடீஸ்வரராக மாற குமிழ் மர வளர்ப்பிற்கு அண்மைக் காலமாக விவசாயிகள் மாறி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள், விருத்தாசலம் வட்டம் அதியமான்குப்பம், வடக்கிருப்பு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் குமிழ் மரங்களை அண்மைக்காலமாக விவசாயிகள் வளர்த்து வருகிறார்கள்.

குமிழ் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்பு நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்ணை புல் டோசர் மூலம் அகற்றி, பின்னர் அதில் 2 ஷ் 2 அடி ஆழம் மற்றும் அகலம் கொண்ட குழி தோண்டி அதில் இயற்கை (மக்கிய குப்பை) உரங்களை இட்டு கன்றுகளை நடவேண்டும். பின்னர் அவற்றுக்கு வாரந்தோறும் நீர்ப் பாய்ச்சி வரவேண்டும். தேவைப்பட்டால் கன்று பருவத்தில் மருந்தும் அடித்து பராமரிக்க வேண்டும்.  

குமிழ் மரக்கன்றுகள் வைத்த 8 ஆண்டுகளில் 8 அடி சுற்றளவுடன் 12 மீட்டர் அல்லது 15 மீட்டர் உயரம் வளரக் கூடியது. குமிழ் மரத்தின் தாயகம் இந்தியாவாகும். இது வங்கதேசம், இலங்கை, மியான்மர், தெற்கு சீனா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் பரவியுள்ளது. நம் நாட்டில் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களைத் தவிர இதர இடங்களில் செழிப்புள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் நன்கு வளருகிறது.

இந்த குமிழ் மரம் 8 ஆண்டுகளில் 8 அடி சுற்றளவுக்கு வளர்ச்சி அடைந்து மரம் ஒன்று  20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விலை போகிறது.

பயன்கள்: குமிழ் மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், ஈரிப் பட்டுப் புழுக்களுக்கு தீனியாகவும் பயன்படுகிறது. இம்மரக்கனிகள் இனிப்பாக உள்ளதால் மலைவாழ் மக்கள் இதை உண்ணுகின்றனர்.

மரம் பழுப்பு மஞ்சள் நிறமுடையது. குறைந்த எடையுடையது. ஒரு கன மீட்டர் மரத்தின் எடை 480 கிலோவாகும். இம்மரம் பலவித தச்சு வேலைகளுக்கு விரும்பி வாங்கப்படுகிறது. மேஜை, நாற்காலிகள், பலகைகள், படகுப் பகுதிகள், பெட்டிகள் என பலவித மரப் பொருள்களைச் செய்ய பயனுள்ளதாக விளங்குகிறது. மேலும் இசைக் கருவிகள் செய்யவும், தீóப்பெட்டி, தீக்குச்சிகள், பேப்பர் மற்றும் காகிதக் குழம்பு தயாரிக்கவும், கனமில்லாத வலுவுடைய மரச்சாமான்களைச் செய்யவும் இம்மரம் பயன்படுகிறது. மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.குமிழ் மரத்தின் இலைகள் மற்றும் வேர்களில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

குமிழ் மரம் வளர்க்க வனவியல் விரிவாக்க மையத்தின் மூலம் தமிழக அரசு விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் அம்மரத்தின் பயன் மற்றும் அவற்றை எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. எனவே மரம் வளர்ப்பு பற்றிய தெளிவுரையும், விழிப்புணர்வும் வனத்துறை அலுவலர்களால் வழங்கப்பட்டால் இம்மரத்தைப் பயிரிட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com