தவாது போன உப்புத் தொழில்

மதுராந்தகம்,  மார்ச் 17: செய்யூர் உப்பள பகுதியில் உப்பு உற்பத்தி குறைவால் உப்பு உற்பத்தி தொழில் சார்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம்,செய்யூரில் கிழக்கு கடற்க
தவாது போன உப்புத் தொழில்

மதுராந்தகம்,  மார்ச் 17: செய்யூர் உப்பள பகுதியில் உப்பு உற்பத்தி குறைவால் உப்பு உற்பத்தி தொழில் சார்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்,செய்யூரில் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வழியில் கழிவெளிப்பகுதியில் 750 ஏக்கர் உப்பள நிலப்பகுதி உள்ளது. இந்த நிலப்பகுதி மத்திய மற்றும் மாநில அரசுக்கு சொந்தமானதாகும்.

இந்த உப்பள நிலப்பகுதியை உப்பு உற்பத்தியாளர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தொழிலாளர்களைக் கொண்டு உப்பு உற்பத்தி செய்வர். இந்த உப்பள பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 75 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்த உப்பை தனியார் உப்பு வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்வர்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவு மற்றும் தோல் பதனிடும் தொழில் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பிற்பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கி ஜூன் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். இயற்கையான இந்த நிலப்பகுதியில் கடல்நீரை மோட்டார் என்ஜின் மூலம் இறைத்து நீரை பாத்திக் கட்டி, நீர் வடிந்த பின்பு உற்பத்தியான உப்பை ஒன்று சேர்த்து விற்கப்படுகிறது.÷இயற்கைக்கு மாறாக மழை பெய்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். உப்பு உற்பத்திக்கு மாநில அரசு கடனுதவி வழங்குவது கிடையாது. முதலீடு செய்து இந்த உப்பு தொழிலில் லாபம் கிடைத்தால் நல்லது. இவ்வளவு கடினமான நிலையில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு குறைந்த அளவிலான (சுமார்) 200 ஏக்கர் நிலப்பகுதியில் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் ஆண்டின் தொடக்கத்திலேயே மூட்டை ஒன்றுக்கு ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது.÷இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபடாமல் உள்ளனர்.உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து உப்பு உற்பத்தியாளர் சுந்தரேசன் கூறியது: தமிழ்நாட்டு உப்பு தான் தூய்மையானதும்,வெண்மையானதுமாகும். புதிய பொருளாதார கொள்கையின் தாராளமயமாக்கல் கீழ் குஜராத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு உப்பு கொண்டு வந்து விற்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து உப்பை அரசு இறக்குமதி செய்தது. இது போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் உப்பின் விலை குறைவாக உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்க முடியாததால் உற்பத்தி செய்யாமல் இருந்து வருகிறோம்.

இதனால் உப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள இப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே, உப்பு தொழில் செய்வோர் பயன்படும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த உப்பு தொழில் செய்து வருபவர்கள் 6 மாதம் மட்டுமே இந்த தொழிலை செய்வார்கள். மீதமுள்ள 6 மாதத்துக்கு வேறு ஏதேனும் தொழில் செய்து கிடைத்த சிறு தொகையைக் கொண்டு பிழைத்து வருகின்றனர். ஆனால், இனி ஆண்டு முழுவதுமே உப்புத் தொழில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் இவர்களின் வாழ்வில் கண்ணீர் தான் மிஞ்சும்? தமி ழ்நாட்டின் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்படாமல் இருக்க அரசு புதிய திட்டம் தீட்டுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com