இறை தத்துவத்தை இலக்கியமாக மாற்றியவர் சேக்கிழார்: ஜே.அழகர் ராமானுஜம்

சிதம்பரம், பிப். 6: இறை தத்துவத்தை பெரியபுராணம் மூலமாக இலக்கியமாக மாற்றியவர் சேக்கிழார் பெருமான். இலக்கியம் படிப்பவர்கள் நாத்தீகவாதிகளாக இருந்தாலும் சேக்கிழார் பெரியபுராணத்தை படித்துதான் ஆக வேண்டும் எ
இறை தத்துவத்தை இலக்கியமாக மாற்றியவர் சேக்கிழார்: ஜே.அழகர் ராமானுஜம்

சிதம்பரம், பிப். 6: இறை தத்துவத்தை பெரியபுராணம் மூலமாக இலக்கியமாக மாற்றியவர் சேக்கிழார் பெருமான். இலக்கியம் படிப்பவர்கள் நாத்தீகவாதிகளாக இருந்தாலும் சேக்கிழார் பெரியபுராணத்தை படித்துதான் ஆக வேண்டும் என திருவாரூர் பேரளம் வேதாத்திரி மகரிஷி ஆசிரம நிறுவனர் ஜே.அழகர் ராமானுஜம் பேசினார்.

 ÷சிதம்பரத்தில் சனிக்கிழமை தொடஙகிய சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக 4-வது இருநாள் மாநில மாநாட்டில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 ÷இந்துமத விழாக்களும், விரதங்களும், அருள் தரும் சிவவடிவங்கள், காஞ்சிபுரம் கங்கையும், ஸ்ரீராகவேந்திரர் அருள் வரலாறு, பகவான் சத்ய சாயிபாபா, சமரசபூமி, திருவருள் வாசகம் ஆகிய நூல்கள் மற்றும் சிவபுரம் அறக்கட்டளையின் திருவாசகம் குறுந்தகடு ஆகியன வெளியிடப்பட்டன.

 ÷இந்நிகழ்ச்சிக்கு, வடலூர் சமரச சன்மார்க்க மைய ஊரன்அடிகளார் தலைமை வகித்து நூல்களை வெளியிட்டார்.

 ÷நிகழ்ச்சியில், தொண்டை மண்டல ஆதீனம் திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியர், புதுக்கோட்டை திலகவதியாளர் திருவருள் ஆதீனம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 ÷மாநாட்டில் திருவாரூர் பேரளம் வேதாத்திரி மகரிஷி ஆசிரம நிறுவனர் ஜே.அழகர் ராமானுஜம் ஞானமும், வாழ்வும் என்ற தலைப்பில் அவர் பேசியது:

 ÷ஞானம் என்பது சேக்கிழார் காட்டிய கல்வி. சேக்கிழார் தந்த பண்பாடு வாழ்வியல். சிற்பக்கலைஞன் மயன் சத்தியத்தை ஐந்து தத்துவமாக உள்ளடக்கினான். மூலம், காலம், கோலம், சீலம், ஞானம் என்று ஐந்தாக சத்தியத்தை உள்ளடக்கினான்.

 ÷எப்படி விவேகானந்தர் இறைதத்துவத்தை சேவையாக, நாட்டுப்பற்றாக மாற்றினாரோ? அதுபோன்று சேக்கிழார் இறைதத்துவத்தை இலக்கியமாக மாற்றினார் என ஜே.அழகர் ராமானுஜம் தெரிவித்தார்.

 ÷மௌனமட மடாதிபதி மௌன சுந்தரமூர்த்திசுவாமிகள் பேசுகையில், "63 நாயன்மார்களில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வரும் சிறந்து விளங்கினர். ÷தற்போது விலைவாசி உயர்வு, தொல்லை, துன்பம் நிறைந்த வாழ்க்கையில் இவைகளிலிருந்து 2 நாள் விடுபடும் அளவில் இந்த சேக்கிழார் மாநாடு நடைபெற்றது.

 ÷கருத்து வேறுபாடு, மன உளச்சல் ஆகியவற்றை மறக்க இங்கு வெளியிடப்பட்ட சமரசபூமி நூலை முழுமையாக படித்தால் போதும் என மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் தெரிவித்தார்.

 ÷ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டுக்கு சேக்கிழார் பண்பாட்டுக் கழக இளைஞரணிச் செயலர் எஸ்.சுப்பையா தலைமை வகித்தார்.

 விழாவில், இலங்கை யோகரத்தினம் ரத்தினம்பிள்ளையின் யோகா நிகழ்ச்சியும், யோகிராஜ் எஸ்.சத்தியநாராயணன் தியான செய்முறை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 ÷தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் ஜி.சேகருக்கு சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழங்கினார்.

 ÷விழாவில், துழாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், அகில இந்திய ஆன்மிக அறிஞர்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் எஸ்.கே.ராஜன், தமிழக தெயவீகப் பேரவைத் தலைவர் அர்ஜுன்சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 ÷மாநாட்டுக் குழுச் செயலர் சு.முத்துகணேசன் நன்றி கூறினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக பொதுச் செயலர் ராஜா தி.விஜயகுமார் தொகுத்து வழங்கினார்.

 கைலாஷ் யாத்ரீகர்களுக்கு நிதிஉதவி வழங்க வேண்டும்: சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக  மாநில மாநாட்டில் தீர்மானம்

 சிதம்பரம், பிப். 6: உச்ச நீதிமன்றத்தில் தடை நீங்கியதால் இஸ்லாமியர்களுக்கு வழங்குவதுபோல் கைலாஷ் செல்லும் இந்து யாத்ரீகர்களுக்கும் அரசு நிதிஉதவி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு தேர்தலுக்கு முன்பு அறிவிக்க வேண்டும் என சிதம்பரத்தில் சைவ ஆதீனங்கள் பங்கேற்ற சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக 4-வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 ÷சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில் தெருவில் உள்ள அறுபத்துமூவர் மடத்தில் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக 4-வது மாநில மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

 ÷மாநாட்டுக்கு, வடலூர் சமரச சுத்த சன்மார்க்க மைய ஊரன்அடிகளார் தலைமை வகித்தார். தீர்மானங்கள் பண்பாட்டுக் கழக பொதுச் செயலரும், மாநாட்டுக் குழுத் தலைவருமான ராஜா தி.விஜயகுமார் தீர்மானங்களை படித்தார்.

 ÷கைலாஷ் செல்லும் இந்து யாத்ரீகர்களுக்கு நிதிஉதவி வழங்கும் அறிவிப்பை தேர்தலுக்கு முன்பு அரசு வெளியிட வேண்டும் என தீர்மானத்தை தொண்டை மண்டல ஆதீனம் திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் கொண்டு வந்து படித்தார்.

 ÷குன்றத்தூரில் அரசு நிதியுதவியின்றி ரூ.2 கோடி செலவில் சேக்கிழாருக்கு மணி மண்டபம் அமைப்பது. பெரியபுராணம் நூலை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை கோருவது மடாதிபதிகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும் பஸ் மற்றும் ரயில்களில் முழுகட்டண சலுகை அளிக்க வேண்டும்.

 ÷சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தை உலகளவில் பரப்ப ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இன்டர்நெட் மூலம் வெளியிடுவது. இதற்கான தொடக்கவிழாவை ஜூன் 6-ம் தேதி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com