புதுக்கோட்டை தினம் கொண்டாடப்பட வேண்டும் - இளைஞர் இலக்கிய நட்பு வட்ட விழாவில் கோரிக்கை

(படம்: மயிலாப்பூர் பாரதீய வித்யாபவனில் புதுகை இளைஞர் இலக்கிய நட்பு வட்ட விழாவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.பிரேம்குமார், டாக்டர் ஜெ.ராஜா முகமது, பா.கிருஷ்ணமூர்த்தி, புதுகை மு.தருமராசன், கவிஞர் வெற்ற
புதுக்கோட்டை தினம் கொண்டாடப்பட வேண்டும் - இளைஞர் இலக்கிய நட்பு வட்ட விழாவில் கோரிக்கை

(படம்: மயிலாப்பூர் பாரதீய வித்யாபவனில் புதுகை இளைஞர் இலக்கிய நட்பு வட்ட விழாவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.பிரேம்குமார், டாக்டர் ஜெ.ராஜா முகமது, பா.கிருஷ்ணமூர்த்தி, புதுகை மு.தருமராசன், கவிஞர் வெற்றிவேலன், சீனு.சின்னப்பா, வி.கே.சுந்தரம், ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்தார், சென்னைக் கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன். உடன் சி.டி.வள்ளியப்பன், பிரசன்ன வெங்கடேசன், டாக்டர் எஸ்.வெங்கட்ராமன் மற்றும் மு.முத்துசீனிவாசன் ஆகியோர்...)

சென்னை, ஏப்.9: புதுகை இளைஞர்கள் இலக்கிய நட்பு வட்டம் சார்பில் சென்னை பாரதிய வித்யா பவனில் பல்துறைச் சான்றோர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பி.வெங்கட்ராமன் எழுதி, மன்னை பாசந்தி வடிவமைத்த "வணக்கம் புதுக்கோட்டை” சிறப்பு மடல் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பி.வெங்கட்ராமன், சென்னை தினம் என்று கொண்டாடப்படுவது போல், புதுக்கோட்டை தினம் என புதுக்கோட்டையில்  கொண்டாட வேண்டும். இம்மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அன்னவாசல் உள்ளிட்ட பல உள்ளன. கலை, இலக்கியம் சிறப்பு கொண்ட பலவற்றையும் ஒருங்கிணைத்து, இந்த தினம் கொண்டாடப்பட வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து புலம் பெயர்ந்து வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் புதுகை அன்பர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மகிழ இது ஒரு வாய்ப்பாக அமையும். சுற்றுலாவும் சிறக்கும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த விழாவில், டெல்பை டி.வி.எஸ் மனிதவளப் பிரிவுத் துணைத்தலைவர் எஸ்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இராம.வீரப்பன் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். வி.என்.சிதம்பரம் மடலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். புதுக்கோட்டை இலக்கியப் பேரவை மு.முத்துசீனிவாசன் வாழ்த்திப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com