ஸ்ரீபுரத்தில் ரூ.10 கோடியில் பெருமாளுக்கு கற்கோயில் சக்தி அம்மா தகவல்

வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலில் பெருமாளுக்கு தனி கற்கோயில் ரூ.10 கோடி செலவில் கட்டப்படவுள்ளது என்று ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா தெரிவித்தார்.

வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலில் பெருமாளுக்கு தனி கற்கோயில் ரூ.10 கோடி செலவில் கட்டப்படவுள்ளது என்று ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா தெரிவித்தார்.

நாராயணி பீடத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: வேதத்தில் எல்லா தெய்வங்களுக்கும் மந்திரங்கள் உண்டு. மகாலட்சுமிக்கான மந்திரம் ஸ்ரீசூக்தம். அதில், மகாலட்சுமி தங்கத்தைப்போல் பிரகாசிப்பதாகச் சொல்லப்படுகிறது. மகாலட்சுமியின் இந்தப் பிரகாசம் அஞ்ஞான இருளை நீக்கி, ஞான ஒளியை உருவாக்குகிறது. அதனால் ஒருவரின் தரித்திரம் நீங்கி அதிர்ஷ்டம் என்ற சக்தி கிடைக்கிறது. தங்கத்தைப்போல் பிரகாசிக்கும் மகாலட்சுமியை ஸ்வர்ண ரூபத்தில் சாதாரண மக்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் 70 கிலோ தங்கத்தில் ஸ்வர்ண லட்சுமி சிருஷ்டிக்கப்பட்டது.

மண்டல பூஜை நடத்தப்பட்டு மார்ச் 29ஆம் தேதி ஸ்வர்ண லட்சுமிக்கு மண்டலாபிஷேகமும் நடந்தேறியது. புதன்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீபுரம் மூல ஸ்தானத்தில் இருந்து சகஸ்ரதீப மண்டபத்துக்கு மகாலட்சுமி இடம் மாறியதும், 36 திரவியங்களால் மகா அபிஷேகம் நடத்தப்படவுள்ளது. பக்தர்கள் வரும் 11ஆம் தேதி முதல் நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தங்கள் கரங்களால் ஸ்வர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்யலாம்.

பெருமாளுக்கு தனிக் கோயில்: ஸ்ரீபுரத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமான பெருமாளுக்கு தனிக் கோயில் அமைய வேண்டும் என்ற பக்தர்களின் விருப்பத்தின்படி ஸ்ரீபுர ஸ்ரீனிவாச பெருமாள் என்ற பெயரில் தனிக் கோயில் எழுப்பப்படவுள்ளது. அதற்கான பூமி பூஜை குரு பீடத்தின் இடது பக்கத்தில் நடந்துள்ளது.

ரூ.10 கோடி செலவில் 108 அடி நீளமும், 90 அடி அகலமும் கொண்ட இந்தக் கோயிலில் மூலவராக ஸ்ரீபுர ஸ்ரீனிவாச பெருமாளும், இப்போது சகஸ்ர தீப மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்வர்ண லட்சுமி இத் திருக்கோயிலின் அர்த்த மண்டபத்திலும் இடம்பெறச் செய்யப்படும். ஸ்ரீபுர ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் திருப்பணி 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றார் சக்தி அம்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com