சொத்துக்காக மகன் மிரட்டல்: கருணாநிதி மருமகள் போலீஸில் புகார்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
சொத்துக்காக மகன் மிரட்டல்: கருணாநிதி மருமகள் போலீஸில் புகார்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார். அதில் சொத்துக்காக மகன் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார்.

அவரது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

கானத்தூரில் ஒரு வாடகை வீட்டில் நான் இப்போது வசித்து வருகிறேன். வயதாகிவிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் எனது மகன் மு.க.மு.அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, மாமியார் யோகமங்களம் ஆகியோர் சொத்துக்காக எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள், ஆள் மூலமாகவும் என்னை மிரட்டி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை கோபாலபுரத்தில் எனக்கு வீடு இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்து என்னையும், என் கணவர் முத்துவையும் அறிவுநிதி விரட்டி அனுப்பிவிட்டார். இதன் பின்னர் அந்த வீட்டை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார். இதனால் வேறுவழியின்றி நாங்கள் இங்கு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம்.

அறிவுநிதி தொடர்ந்து மிரட்டி வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. மேலும் எங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் எங்களை மிரட்டும் அறிவுநிதி, பூங்கொடி,யோகமங்களம் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறுப்பு
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மு.க. முத்து புகார் மனு கொடுத்த நிலையில் இந்த புகார் மனுவை மறுத்து மு.க. முத்து சார்பில் திங்கள்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தனது மனைவியை யாரோ தூண்டிவிட்டு இந்த புகார் மனுவை கொடுக்கச் செய்துள்ளதாகவும் தனக்கும் மகனுக்கும் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றும் கூறியுள்ளார். எங்களது குடும்பப் பிரச்னைக்கு நானும், எனது மனைவியும், மகனும் பேசி தீர்வு காண்போம் என்றும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com