தமிழகம்: மார்ச் 29-இல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்: மே 16-இல் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 29 முதல் தாக்கல் செய்யலாம். வாக்கு எண்ணிக்கை மே 16-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம்: மார்ச் 29-இல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்: மே 16-இல் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 29 முதல் தாக்கல் செய்யலாம். வாக்கு எண்ணிக்கை மே 16-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலும், வாக்கு எண்ணிக்கையும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் அதே நாளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது:

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜிநாமா செய்த ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலும் இதே நாளில் நடைபெறும்.

5.37 கோடி வாக்காளர்கள்: தமிழகத்தில் மொத்தம் 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 2.69 கோடி. பெண்கள் 2.68 கோடி. மற்றவர்கள் 2,996 பேர்.

60,418 வாக்குச் சாவடிகள்: கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 52,145 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக 8,273 அதாவது 60,418 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

மிகப்பெரிய தொகுதி: தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. இங்கு 18 லட்சத்து 55 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர். மிகக்குறைவாக நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 11 லட்சத்து 88 ஆயிரத்து 738 வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: 29-03-2014 (சனிக்கிழமை)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: 5-04-2014 (சனிக்கிழமை)

வேட்புமனு பரிசீலனை: 7-04-2014 (திங்கள்கிழமை)

வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாள்: 9-04-2014 (புதன்கிழமை)

வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: 24-04-2014 (வியாழக்கிழமை)

வாக்குகள் எண்ணப்படும் நாள்: 16-05-2014 (வெள்ளிக்கிழமை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com