1.28 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர நேற்று வரை 1.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர நேற்று வரை 1.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34,52,071 வாக்காளர்கள் உள்ளனர். அன்று முதல் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  மேலும் கடந்த செப்டம்பர் 20, அக்டோபர் 5-ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிலையில் 3-ஆம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,973 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தேர்தல் சிறப்பு பார்வையாளர் இரா. செல்வராஜ் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய வட்டங்களில் நடந்த சிறப்பு முகாமை பார்வையிட்டனர். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அங்கையற்கன்னி ஆகியோர் உடன் இருந்தனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு முகாமில் மட்டும் 32,613 பேர் புதிய வாக்காளர் பட்டியில் பெயர் சேர்த்தல் தொடர்பாக விண்ணப்பம் வழங்கினர்.

1.28 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி 3 சிறப்பு முகாமையைச் சேர்த்து இது வரை 1,28,232 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 25,658 பேர் விண்ணப்பித்துள்ளனர். தாம்பரத்தில் 17,528, பல்லாவரத்தில் 15,013, ஆலந்தூரில் 14,245, ஸ்ரீபெரும்புதூரில் 13,356,  செங்கல்பட்டு 10,181, திருப்போரூர் 8,331, உத்தரமேரூர் 7,635, காஞ்சிபுரம் 6,068, செய்யூர் 5,498, மதுராந்தகம் 4,719 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 3 சிறப்பு முகாம்களையும் சேர்த்து இது வரை 1,28,232 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 2,485 பேர் பெயர் நீக்கம் தொடர்பாகவும், திருத்தம் தொடர்பாக 8,462 பேரும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக 8,462 பேர் என இது வரை 1,48,077 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com