விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மானாவாரியில் பயிரிட்டுள்ள பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மானாவாரியில் பயிரிட்டுள்ள பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1.40 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. அதில், 1.27 லட்சம் ஹெக்டேரில் பம்ப்செட் மற்றும் மானாவாரி விளைநிலங்களில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டிற்கு மானாவாரியிலும், பம்ப்செட் விவசாயத்தில் நெல் பயிர் 31 ஆயிரம் ஹெக்டேரிலும், 52500 ஹெக்டேரில் மக்காச்சோளம், சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட தானியப் பயிர்களும், பயறு வகைகள் 12200 ஹேக்டேரிலும், எண்ணைய் வித்து பயிர்கள் 6400 ஹெக்டேரிலும், கரும்பு 2900 ஹேக்டேரிலும், பருத்தி 12900 ஹெக்டேரிலும் சாகுபடி செய்வதற்கு வேளாண்மை துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே பம்ப்செட் விவசாயத்தில் சூரியகாந்தி, கடலை, கரும்பு, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 35 ஆயிரம் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. அதேபோல், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட வட்டார பகுதி கிராமங்களில் அவ்வப்போது பெய்த மழையை நம்பி கடந்த 1 மாதத்திற்கு முன்பே தானியப் பயிர்களான கம்பு, சோளம், தினை, குதிரைவாலி, கேழ்வரகு, பயறு வகைகளை பயிரிட்டனர். அதோடு, விவசாயிகள் எதிர்பார்க்கிற தானிய விளைச்சளும் அதிகமாக கிடைக்கும் பருவம் என்பதால் ஆர்வத்துடன் விதைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்த மழையால் பயிர் செழிப்பாக வளர்ந்து நன்றாக உள்ளது. இதைத் தொடர்ந்து களையெடுப்பு மற்றும் உரம் இடும் பணியிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று இரவு தொடங்கி விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது. விருதுநகர், கோவிலாங்குளம்-44 மி.மீ, ஸ்ரீவில்லிபுத்தூர்-35 மி.மீ, திருச்சுழி, காரியாபட்டி-22 மி.மீ, வத்திராயிருப்பு-21 மி.மீ, அருப்புக்கோட்டை-9 மி.மீ, பிளவக்கல்-7 மி.மீ, சிவகாசி-6.40 மி.மீ, சாத்தூர்-3 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் மானாவாரியில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com