விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் 13,203 பேர் விண்ணப்பம்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமில் 13203 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமில் 13,203 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 15.9.2015ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், இம்மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆண்கள்-7,46,631 பேரும், பெண்கள்-7,65,494 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 125 பேரும் மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 250 வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோல், மாவட்டத்தில் 1857 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் (11-ம் தேதி) நடத்தப்பட்டது.

இம்முகாம்களில் தொகுதி வாரியாக மனுக்கள் பெறப்பட்ட விவரம் வருமாறு:  ராஜபாளையம்-1747, ஸ்ரீவில்லிபுத்தூர்-1351, சாத்தூர்-2306, சிவகாசி-1938, விருதுநகர்-2065, அருப்புக்கோட்டை-1850, திருச்சுழி-1946 என மொத்தம்-13203 மனுக்கள் வரையில் பெறப்பட்டது.

மேலும், 1.1.2016ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கவும், இடமாற்றம் தொடர்பாகவும் வீட்டுக்கருகே உள்ள வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பங்களை பெற்று வருகிற 24-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து  அளிக்கலாம். எனவே இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தகுதியானவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கவும், பிழையில்லா பட்டியல் தயாரிக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com