தமிழக அரசு விவசாயிகளை பற்றி கவலைகொள்வதில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக அரசு விவசாயிகளை பற்றி கவலைகொள்வதில்லை என்று திமுக பொருளர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி பேசினார் .

தமிழக அரசு விவசாயிகளை பற்றி கவலைகொள்வதில்லை என்று திமுக பொருளர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி பேசினார் .

திமுகவின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்டாலின், பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகுள்பட்ட விவசாயிகள், மாணவர்கள், சுயஉதவிக்குழுவினர் ஆகியோரை சந்தித்து வருகிறார்.

பயணத்தின் தொடக்கம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கடைத்தெருவில் காரை விட்டு இறங்கி நடந்து வழியில் பொதுமக்கள் சந்தித்து அதிமுக ஆட்சியின் குறைகளை கேட்டறிந்தார். மேலநாகை என்ற இடத்தில் கரும்பு, நெல் விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக அரசு விவசாயிகளை பற்றி கவலைகொள்வதில்லை.

விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ள போதும், அது பற்றி கவலைப்படாமல் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதுபற்றி ஆய்வு செய்ய வேண்டிய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமின்றி நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற, மாற்றத்தை ஏற்படுத்த திமுக ஆட்சிக்கு வரவேண்டும். திமுக ஆட்சிக்கு வர விவசாயிகள் மனது வைத்தால் முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com