ஸ்டாலின் பயணத்தில் வகுப்புவாதம், தீண்டாமை பற்றி பேசுவதில்லை: ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள நமக்கு நாமே மீட்பு பயணத்தில் வகுப்புவாதம் மற்றும் தீண்டாமை குறித்து பேசுவதில்லை என குற்றஞ் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள நமக்கு நாமே மீட்பு பயணத்தில் வகுப்புவாதம் மற்றும் தீண்டாமை குறித்து பேசுவதில்லை என குற்றஞ் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

திருவாரூரில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய பாஜக அரசில் சிறுபா ன்மையினர், தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் கூறும் கருத்துக்கள் ஏற்புடையதல்ல.

நாட்டில் ஊழல் தலை விரித்தாடும் சூழலில் நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக, பாமக இதுகுறித்து எதுவும் பேசாதது ஊழலில் சிக்கியுள்ளதே காரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலையில், தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். 72 சாதிவெறி கொலைகள் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு வரும் மு.க. ஸ்டாலின் ஓரிடத்தில் கூட பேசுவதில்லை.

மத்திய, மாநில அரசுகளின் திறமையற்ற நிர்வாகம் பருப்பு விலை உயர்வுக்கு காரணமென்றா லும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, ஆன்லைன் வர்த்தகமும் ஒரு காரணம். பா ஜக அரசின் எழுத்தாளர்களின் கருத்துரிமை பாதிக்கப்படுகிறது, சிறுபான்மை, தலித் மக்கள் அதிகம் தாக்கப்படுகிறார்கள். இது கண்டனத்துக்குரியது.

மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்ப டுத்தாததைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் நவ. 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தவிர நவ.2-ம் தேதி மக்கள் நல கூட்டியக்கத்தின் குறை ந்த பட்ச செயல் திட்டம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவையில் நவ.25-ம் தேதி செயல் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெறும்.

மத்திய அமைச்சர் வி.கே.  சிங்கை அமைச்சரவையிலிருந்து மோடி அரசு நீக்க வேண்டுமென்றார் ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com