ஈழத்தில் மோசமான நிலைமையே தொடர்கிறது

ஈழத்தில் இன்னும் மோசமான நிலைமையே தொடர்கிறது என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.
ஈழத்தில் மோசமான நிலைமையே தொடர்கிறது

ஈழத்தில் இன்னும் மோசமான நிலைமையே தொடர்கிறது என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.
 தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்சை க. பத்மா எழுதிய ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள் என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
 ஈழத்தில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. ஈழத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அங்கு நிகழும் கொடுமைகளை விவரிக்கின்றனர். அங்குள்ள தமிழ் மக்கள் அபாயகரமான சூழ்நிலையில் வாழ்க்கையின் விளிம்பில் தவிக்கின்றனர். பத்து பேருக்கு ஒரு ராணுவ வீரர் வீதம் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். ஈழத்தில் 2 லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தவர்களைத் தண்டிக்காமல், அதுபற்றி உள்நாட்டு விசாரணையே போதும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறிவிட்டது. இதற்கு இந்தியா போன்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்தது. இதைத் தடுக்கவோ, எதிர்த்து போராடவோ நம்மால் முடியவில்லை.
 இதுபோன்ற நிலை வருங்காலத்தில் மலேசியா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் நேரிடலாம்.
 தமிழகத்தில் உள்ள அனைவரும் ஜாதி, மத, கட்சிகள் போன்ற வேறுபாடுகளைத் துறந்து உறுதியாகப் போராடினால்தான் இந்திய அரசைப் பணிய வைக்க முடியும். நம் குரலுக்கு உலக நாடுகளும் செவி சாய்க்கும் என்றார் நெடுமாறன்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், முனைவர் ம. நடராசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் குழ. பால்ராசு, கவிஞர்கள் இர. கங்கை மணிமாறன், பி.கே. முத்துசாமி, நூலாசிரியர் க. பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, புலவர் இரா. மாறன் வரவேற்றார். முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றப் பொருளாளர் தியாக. சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com