ஆளுநருடன் கருத்து வேறுபாடில்லை: புதுச்சேரி முதல்வர்

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள யூனியன் பிரதேச சட்டத்தின்படியே ஆளுநரும் நானும் செயல்படுகிறோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி: அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள யூனியன் பிரதேச சட்டத்தின்படியே ஆளுநரும் நானும் செயல்படுகிறோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைத்து 2 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. பல துறைகளில் நிரப்பப்படாமல் இருந்த காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் பணிகள் தேங்கியிருந்தது. தேவையான பதவி உயர்வை உடனடியாக நாங்கள் வழங்கியுள்ளோம். தொழிலாளர் துறை மூலம் கணினி பயிற்சி பெற்ற 62 பேருக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தில்லி மாநிலம்டெ 239 (ஏ) (ஏ) அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுகிறது. புதுச்சேரி  யூனியன் பிரதேச சட்டம் 1963-ன்படி செயல்படுகிறது. அந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். நாங்கள் எங்களுக்கான அதிகாரத்தின்படி செயல்படுகிறோம். புதுச்சேரி தூய்மை திட்டத்தின் ரஜின்காந்த் வந்தால் மகிழ்ச்சி.

மத்திய அரசிடம் இருந்து சமீபத்தில் ஒரு அறிவிக்கை கிடைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்படுவது போல புதுச்சேரிக்கும் மத்திய அரசு திட்டங்களுக்கு 100 சதவீத நிதி கிடைக்கும் என்று தெரிவித்தார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com