திருவெண்ணெய்நல்லூர் அருகே மணலில் சிக்கி சிறுவன் சாவு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மணலில் சிக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிந்தார்.

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மணலில் சிக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் இளந்திரை காலனியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவரது மகன் அர்ஜூன் ஊருக்கு அருகேயுள்ள ராகவன் கால்வாயில் மணலில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் மணல் சரிந்து அதில் சிக்கி கொண்டதாக தெரிகிறது. உடனடியாக சிறுவனை மணலிலிருந்து மீட்டு அருகேயுள்ள பாவந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com