சட்டங்கள் குறித்து ஐஆர்பிஎன் போலீஸாருக்கு பயிற்சி

நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்கள் குறித்து புதுவையில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸôருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

புதுச்சேரி: நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்கள் குறித்து புதுவையில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

 புதுவையில் உள்ள அனைத்து துறைகளில் உள்ள பணியாளர்களுக்கும் மாதமொருமுறை புதிதாக இயற்றப்படும் சட்டங்கள், நடைமுறைக்கு வரும் விதிகள் குறித்து விளக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அண்மையில் உத்தரவிட்டார்.

 இதனையடுத்து புதுவை இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸாருக்கு சட்டங்கள் குறித்து பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி காவலர் பயிற்சி பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை புதுவை காவல்துறை முதுநிலை எஸ்.பி.யும் ஐஆர்பிஎன் கமான்டன்டுமான ராஜீவ் ரஞ்சன் தொடங்கி வைத்தார்.

 அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மனிதர்கள் மற்றும் பொருள்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து ஐஆர்பிஎன் உதவி கமான்டன்ட் கொன்டா வெங்கடேஸ்வர ராவ், மனித உரிமைகள் குறித்து துணை கமான்டன்ட் பிரதாப் சந்திரன், போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து ஆய்வாளர் முருகையன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எஸ்.பி. ரச்சனா சிங் உள்ளிட்டோர் வகுப்புகளை எடுத்தனர்.

 இந்த பயிற்சி நிகழ்ச்சியில் ஐஆர்பிஎன் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், உதவி சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com