பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பண்ருட்டி வட்டம் தணிச்சன் குப்பம் ஊராட்சியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி இயங்கி வருகின்றது. இதில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நெய்வேலி: பண்ருட்டி வட்டம் தணிச்சன் குப்பம் ஊராட்சியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி இயங்கி வருகின்றது. இதில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 இங்குள்ள விடுதியில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக தரம் இல்லாத உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர், விடுதியில் உணவு உட்கொண்ட மாணவ, மாணவியர் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தரமான உணவு வழங்கப்பாடாதை கண்டித்தும், உணவு விடுதியை மாணவர்களே நடத்த அனுமதி கோரியும், திங்கள் கிழமை இரவு முதல்

விடுதி மாணவர்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கல்லூரி நுழைவு வாயில் அருகில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com