வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் நிறைவு

கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகளை வைத்துள்ளோர் தாமாக முன்வந்து வருமான வரித் துறையிடம் தெரிவிக்கும் திட்டம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகளை வைத்துள்ளோர் தாமாக முன்வந்து வருமான வரித் துறையிடம் தெரிவிக்கும் திட்டம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. கடந்த ஜூன் 1-இல் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்துக்காக அச்சிடப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து வருமான விவரத்தை இணையதளம், நேரில் தாக்கல் செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடைசி நாளான வெள்ளிக்கிழமை (செப்.30) நள்ளிரவு 12 மணி வரை கணக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து முதன்மை ஆணையாளர்களும் பணியில் இருந்தனர். இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் அமைந்துள்ள வருமான வரித் துறை முதன்மை ஆணையாளர் அலுவலகத்திலும் ஏராளமானோர் திண்டு, ஆர்வத்துடன் தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக இணையதளங்களில் மத்திய நேரடி வரி வாரியம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாகவும், நாட்டின் நலன் கருதியும் கணக்கில் வராத வருமானம் குறித்த விவரங்களை வரி செலுத்துவோர் தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த தொகை குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com