உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு

சட்டப் பேரவைத் தேர்தலில், திமுகவுக்கு உளுந்தூர்பேட்டை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி (மமக) விட்டுக் கொடுத்துள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில், திமுகவுக்கு உளுந்தூர்பேட்டை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி (மமக) விட்டுக் கொடுத்துள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
 திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், தொண்டாமுத்தூர், நாகை, ஆம்பூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
 இந்த நிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மமக தலைவர் ஜவாஹிருல்லா வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது, உளுந்தூர்பேட்டைக்கு மமக சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆள் இல்லாததால், வேறு தொகுதியை ஒதுக்கித் தருமாறும் கோரியுள்ளார்.
 வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கும் நிலையில் தொகுதி மாற்றம் செய்வது முடியாத காரியம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 இதைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டையில் மமக போட்டியிடவில்லை என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இதை கருணாநிதி ஏற்றுள்ளார்.
 வேட்பாளர் அறிவிப்பு: இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளராக ஜி.ஆர்.வசந்தவேல் அறிவிக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 மமகவின் 4 வேட்பாளர்கள்: இதைத் தொடர்ந்து, மமக வேட்பாளர்களை ஜவாஹிருல்லா அறிவித்தார்.
 ராமநாதபுரம் - ஜவாஹிருல்லா, தொண்டாமுத்தூர் - கோவை சையது, நாகை - ஜப்ருல்லா, ஆம்பூர் - நசீர் அகமது.
 174 தொகுதிகளில் போட்டி: திமுக 173 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. உளுந்தூர்பேட்டையை மமக திமுகவுக்கு விட்டு கொடுத்தால், 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மேலும், கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் 6 தொகுதிகளில் திமுகவின் "உதயசூரியன்' சின்னத்தில் நிற்க உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com