தடையை மீறி கள் விற்க முயன்ற 22 பேர் கைது

கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை.

திருச்சியில் தடையை மீறி கள் விற்க முயன்ற 22 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் திருச்சியில் கள் விற்பனை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை.
 கள் இறக்குவது தொடர்பான சட்டத்தை அமல்படுத்தக் கோரி முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் அது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
 கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இதையொட்டி நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, கள்ளை விற்பனை செய்ய வந்துள்ளோம் என்றார். இதைத் தொடர்ந்து நல்லசாமி உள்ளிட்ட 22 பேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கள் பானை, பாட்டில்களில் அடைக்கப்பட்ட கள் பானங்களுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் நோக்கி வந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com