அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல.. பாஜகதான் : தமிழிசை பேட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மாற்று திமுக என்று கூறுகிறார்கள். ஆனால், திமுக மாற்று சக்தி அல்ல. பாஜகதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல.. பாஜகதான் : தமிழிசை பேட்டி

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மாற்று திமுக என்று கூறுகிறார்கள். ஆனால், திமுக மாற்று சக்தி அல்ல. பாஜகதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

கௌத்தூரில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய தமிழிசை, கொளத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக மூலம், தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் விலை ரூ.7 குறைக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. ஆவின் விலை கூடியதே, அங்கு நடந்த ஊழலால்தான். ஆவின் பால் பண்ணையில் ஊழல் நடந்திருப்பது 2014ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ஆவினில் ஊழல் துவங்கியது 10 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது திமுக ஆட்சியில்தான்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில், தமிழகம், கேரளா உட்பட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் சுமார் 60 ஆயிரம் கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் புழங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

அப்படியானால் எந்த அளவுக்கு தமிழகத்தில் பணப்புழக்கம் இருக்கிறது என்பது தெரிகிறது.

ஆனால், தேர்தல் ஆணையமோ, நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று விரும்பினால் கட்சிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையும் மீறி அதிமுக நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டத்துக்கு ஆட்களை சேர்த்துள்ளார்கள்.

திமுக ஆட்சி காலத்தில்தான் கனிம வள கொள்ளை மூலம் தமிழக மக்களின் ஒன்றை லட்சம் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மணல் கொள்ளையும் திமுக ஆட்சியில்தான் நடந்தது. எனவே அதிமுகவுக்கு மாற்று திமுக இல்லை. பாஜகதான் என்று தமிழிசை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com