
சென்னை : தமிழகத்தில் திமுகவில் இருக்கும் சிலருக்கு சொந்தமான மது ஆலைகள் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது அவர்களது கற்பனையே. அவ்வாறு இருந்தால், அதனை மூடிவிடுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கருணாநிதி இன்று பேட்டியளித்தார்.
அதில், தமிழகத்தில் மதுவிலக்குக் கொண்டு வருவோம் என்று கூறி வரும் திமுக கட்சியில் இருப்பவர்களுக்கே சொந்தமாக மது ஆலைகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, திமுகவினருக்கு சொந்தமாக மது ஆலைகள் இருப்பதாகக் கூறப்படுவது கற்பனையே.. அவ்வாறு இருந்தாலும், தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டதும், அவை அனைத்தையும் மூடி விடுவோம் என்று கூறினார்.
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைத்தால் கூட்டணி ஆட்சியை அமைப்பீர்களா என்று கேட்டதற்கு, தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பில்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.