தூத்துக்குடி இரட்டைக் கொலை: சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை

தூத்துக்குடி இரட்டைக் கொலை: சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு வியாபாரி உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு வியாபாரி உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மின்மோட்டார் மற்றும் இரும்பு வியாபாரம் செய்து வந்த எஸ்.எஸ்.பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜெயலிங்கமும் (60),  டிரை சைக்கிளில் பொருள்களை கொண்டுசெல்லும் தொழிலாளியான கே.வி.கே.நகரைச் சேர்ந்த பண்டாரமும் (55)  சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

வியாபாரி ஜெயலிங்கத்தை குறிவைத்து சிலர் வெட்ட முயன்றபோது, தடுக்க முயன்ற தொழிலாளி பண்டாரமும் வெட்டிக் கொலை செய்யப்பட்டது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொலை நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் யாருடையது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கொலை நிகழ்ந்த பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை பார்வையிட்டனர். அதில், சந்தேகப்படும்படியான வகையில் நடமாடிய 5 பேர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். தொழில் போட்டி, பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஜெயலிங்கத்தின் வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு ஆகியவை காரணமாக கொலை நிகழ்ந்து இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com