நாடு முழுவதும் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன: பியூஷ் கோயல்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு நவம்பர் வரை நாடு முழுவதும் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன: பியூஷ் கோயல்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு நவம்பர் வரை நாடு முழுவதும் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட கருத்துகளை, தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்திக் குறிப்பாக வெளியிட்டது. அதன் விவரம்: பயணிகளுக்கு அதிகளவு பாதுகாப்பு மற்றும் தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ரயில்வே துறை உறுதி பூண்டுள்ளது. மிக முக்கியமாக பயணிகளுக்கு விபத்தில்லா பயணத்தைக் கொடுப்பதே இப்போதைய முக்கிய நோக்கம். 
ரயில் தண்டவாளங்களைப் பராமரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது வழக்கமான நேரத்தை விட தண்டவாளங்கள் 21 சதவீத நேரம் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. 
மேலும் , புதுப்பிக்கப்பட வேண்டிய தண்டவாளங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
ஏப்.1-ஆம் தேதி முதல் நவ.30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 8 ரயில்கள் கவிழ்ந்து விபத்துக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாண்டு 5 விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன.
விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை: இதுபோன்ற ரயில் விபத்துகள் முற்றிலும் அடுத்து வரும் ஆண்டுகளில் தடுக்கப்படும். அதேபோல் ரயில்வே லெவல் கிராஸிங் காரணமாக ஏற்படும் விபத்துகளும் 89 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆளில்லா ரயில்வே லெவல் கிராஸிங்குகள் இல்லாத வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com