ராகுல் காந்தி இன்று குமரி வருகை

"ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வருகிறார்.
ராகுல் காந்தி இன்று குமரி வருகை

"ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வருகிறார்.
விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடையும் அவர், அங்கிருந்து காலை 11 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம், தூத்தூர் புனித யூதா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். பிறகு அங்கிருந்து காரில் சின்னத்துறை செல்லும் ராகுல் காந்தி, அங்கு பங்குத்தந்தைகள், மீனவப் பிரதிநிதிகள், மீனவ மக்களைச் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து ரப்பர், வாழை விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளிடம் பயிர்ச் சேத விவரங்களை கேட்டறிகிறார். காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக ராகுல் காந்தி இன்று தமிழகத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அதிகரிப்பு: ராகுல் காந்தியின் வருகையையொட்டி, கடலோரப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் வந்து இறங்கும் கல்லூரி வளாகத்திலும் புதன்கிழமை காலை முதல் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருநாவுக்கரசர் ஆய்வு: இதனிடையே, குமரிக்கு புதன்கிழமை வந்த, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல் காந்தி செல்லவுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com