சசிகலா தேர்வு: ராமதாஸ், தமிழிசை கருத்து

அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை கருப்புநாள் என்றே கூறலாம். எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், மக்களின் ஆதரவு இருப்பதாகத் தோன்றவில்லை.
ஜெயலலிதாவை முதல்வராக முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்ற எம்எல்ஏக்கள், இப்போது வேறு ஒருவரை முதல்வராக்கப் போகின்றனர். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா ஆகியோர் அமர்ந்திருந்த நாற்காலியில், வழக்குகளையும் எதிர்கொண்டு வரும் சசிகலா அமரப் போகிறார். இதை நினைக்கும்போது தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் எழுகிறது. மக்கள் தான் இனி தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை: ஜெயலலிதாவுக்கு நிகரானவராக சசிகலாவை கருத முடியாது. ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அன்றைய இரவு, அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். சவாலான சூழல்களையும் திறம்பட கையாண்டு வந்தார்.
இந்த நிலையில், அவசரமாக சசிகலாவை முதல்வராக ஆக்க முனைவது ஏன்? இதுகுறித்து மக்கள் நிச்சயம் கேள்வி கேட்பார்கள். இருப்பினும், அவரை தேர்வு செய்யதிருப்பது அதிமுகவின் உரிமை.
காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வெ.கே.எஸ். இளங்கோவன்: எம்எல்ஏக்களால் சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.
இதை அதிமுக உண்மையான தொண்டர்களும், பொதுமக்களும் எந்தக் காலத்திலும் இவரை முதல்வராக ஏற்க மாட்டார்கள். அதனால் வரவுள்ள இடைத்தேர்தலில் பொதுமக்கள் படுதோல்வி அடையச் செய்வர் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com