பரபரப்பு கூட்டிய ஓ.பி.எஸ். அணி; நாள் முழுவதும் மௌனம் காத்த சசிகலா!

நாள் முழுவதும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, அரசியலில் பெரும் பரபரப்பைக் கூட்டிய போதும், அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா முழு மௌனம் காத்தார்.
சென்னையிலுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் முதல்வருக்கு ஆதரவாகப் பேசுகிறார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். உடன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனுசாமி.
சென்னையிலுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் முதல்வருக்கு ஆதரவாகப் பேசுகிறார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். உடன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனுசாமி.

நாள் முழுவதும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, அரசியலில் பெரும் பரபரப்பைக் கூட்டிய போதும், அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா முழு மௌனம் காத்தார்.
கட்சி நிர்வாகிகள் மட்டுமே அவ்வப்போது ஊடகங்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். ஆனால் சசிகலா எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி வியாழக்கிழமை காலையில் இருந்தே அரசியல் களத்தை சூடாக்கியது. அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கே சென்று அவருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவியது. வேறு மூத்த தலைவர்களும் சந்திக்கக் கூடும் என்று ஊடகங்களில் பரவலாக செய்தி பரவியது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி இந்திய அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த வேளையில், அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா எந்தக் கருத்தையும் வியாழக்கிழமை தெரிவிக்கவில்லை. முழுமையாக அமைதி காத்தார்.
ஆளுநர் வருகைக்காக காத்திருப்பு: இதனிடையே, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ், வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் சென்னை வந்தார்.
இதையடுத்து, அனைவரது கவனமும் ஆளுநர் மாளிகை நோக்கித் திரும்பியது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை 5 மணிக்கும், வி.கே.சசிகலாவுக்கு மாலை 7.30 மணிக்கும் சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்திருந்தார் ஆளுநர்.
இதனால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 4.30 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், மனோரஞ்சிதம் ஆகியோர் சென்றிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்தது.
சசிகலா சந்திப்பு: ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அரசியலில் பரபரப்பை கூட்டிக் கொண்டிருக்க, வியாழக்கிழமை காலையில் இருந்து இரவு வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்த வி.கே.சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தார்.
முன்னதாக, மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, ஆளுநரைச் சந்தித்து தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com