வி.கே.என். கண்ணப்பன் காலமானார்

திருச்சியில் தொழிலதிபரும், திமுகவின் முக்கியப் பிரமுகருமான வி.கே.என். கண்ணப்பன் (படம்) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) காலமானார்.

திருச்சியில் தொழிலதிபரும், திமுகவின் முக்கியப் பிரமுகருமான வி.கே.என். கண்ணப்பன் (படம்) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) காலமானார். திருச்சி தில்லைநகர் 9-ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வந்தவர் தொழிலதிபர் வி.கே.என். கண்ணப்பன் (75). விகேஎன் நிறுவனங்களின் தலைவரான இவர், திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராவார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலமாகும்.
சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகி கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த கண்ணப்பன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விகேஎன் கண்ணப்பனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
திமுக மாவட்டச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வி.கே.என். கண்ணப்பன் உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி, ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு ராஜா, கல்யாணசுந்தரம், நாராயணன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com