சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!

கர்நாடகத்தில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், அந்த மாநில அரசின் செலவு தொகையான ரூ.12.04 கோடியை வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு கர்நாடகம் கடிதம் அனுப்பியுள்ளது.

கர்நாடகத்தில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், அந்த மாநில அரசின் செலவு தொகையான ரூ.12.04 கோடியை வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு கர்நாடகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு அனுப்பியுள்ள கடித விவரம்:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 2004 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கான செலவு ரூ. 2.86 கோடியாகும். மேலும், பாதுகாப்புக்காக ரூ.3.78 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, 2014 முதல் 2016 வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை நடைபெற்றது. இதற்கான செலவு ரூ.4.68 கோடியும், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு உணவு மற்றும் போக்குவரத்துக்கு ரூ.7.03 லட்சம் என மொத்தம் இந்த வழக்கிற்காக கர்நாடக அரசு ரூ.12.04 கோடி செலவு செய்துள்ளது.
இந்தத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com