'தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'

தாயை பெருமைப்படுத்துவதைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம் வலியுறுத்தினார்.

தாயை பெருமைப்படுத்துவதைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம் வலியுறுத்தினார்.
உலக தாய் மொழி தின விழா சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசியது:-
மொழி, கலாசாரப் பன்முகத்தன்மை, பன்மொழி அறிவை ஒரு ஆக்கமாகப் பயன்படுத்தி அமைதியையும், நிலையான வளர்ச்சியையும் ஏற்படுத்த யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. தமிழ் கற்ற காரணத்தால் தலை நிமிர்ந்து நின்றவர்கள் தமிழ்ப் புலவர்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்வை எவராலும் வாழ முடியாது. அரசியல், சமூகத்தில் சிறப்பு பெற்று விளங்கிய தமிழ்ப்புலவர்கள் தாங்கள் இல்லாத அரசவையைக் காண இயலாது என்ற அளவுக்கு தமிழுக்குச் சிறப்பு வழங்கினர். தமிழில் உள்ள இலக்கியங்கள், ஒழுக்கக்கூறுகள் வேறு எந்த மொழியிலும் இல்லை. தாயைப் போன்று தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து சென்னை பல்கலை. முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் தி.இராசகோபாலன் பேசுகையில், 'தமிழ் எங்கே இருக்கிறதோ அங்கே சிவபெருமான் இருக்கிறார். தமிழர்கள் தங்களது மொழியை தெய்வத்துக்கு இணையாக நினைக்கின்றனர்' என்றார்.
நிறுவனப் பதிவாளர் முகிலை ராசபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com