குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:  குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் 

திமுக  சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் மேதகு ராம்நாத் கோவிந்துக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டி, மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட இத்திருநாட்டின் பன்முகத் தன்மையைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர் உறுதியாக இருப்பார் என்று மனதார நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com