டென்டர் எடுப்பதில் அதிமுக.,வினர் இடையே மோதல்: திருவண்ணாமலையில் அரசு அலுவலகம் சூறை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆயலவாடி கிரமத்தில் 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட அதிகாரிகள் உதவி செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆயலவாடி கிரமத்தில் 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட அதிகாரிகள் உதவி செய்தனர். இதற்கான ஒப்பந்த புள்ளிகள் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று கலசப்பாக்கம் வாட்டாட்சி அலுவலர் அறிவித்திருந்தார்.

அதன்படி, கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டன. இந்த ஒப்பந்த புள்ளிகள் போடுவதில் அதிமுகாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அரசினருக்கும், தற்போதைய எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாட்டாட்சி வளர்ச்சி அலுவலகத்திலேயே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் தள்ளிவிடப்பட்டார். அலுவலகத்தில் இருந்த மேஜை உடைக்கப்பட்டன. இதில் அதிமுக-வை சேர்ந்த மணி என்பவர் காயமடைந்தார்.

அலுவலகமே போர்க்களமாக மாறியதால் டென்டர் ரத்து செய்யப்படுவதாக கலசபாக்கம் வட்டாட்சி அலுவலர் சஞ்சிவ் குமார் அறிவித்தார். தகவலறிந்த போலூர் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் விரைந்து வந்து  இருதரப்பினரையும் வெளியேற்றினார். தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் வட்டாட்சி அலுவலகம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com