பிளாஸ்டிக் அரிசி எப்படி கண்டுபிடிப்பது?

தமிழகத்தில் தற்போது பீதியை ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக் அரிசியை, பொதுமக்களே எளிய முறையில் கண்டுபிடிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் அரிசி எப்படி கண்டுபிடிப்பது?

தமிழகத்தில் தற்போது பீதியை ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக் அரிசியை, பொதுமக்களே எளிய முறையில் கண்டுபிடிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது அந்த மாநில முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியது. மக்களிடையே ஏற்பட்ட பீதி காரணமாக, அந்த மாநிலத்தில் கடந்த 3 நாள்களில ரூ. 3 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக ஆந்திர மாநில அரிசி வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னையிலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக ஆங்காங்கே புகார் தெரிவிக்கப்பட்டது. சென்னை அயனாவரம் மாநகரப் போக்குவரத்துக்கழக பணிமனை உணவகத்தில் விநியோகிக்கப்பட்ட உணவு பிளாஸ்டிக் அரசியால் செய்யப்பட்டிருப்பதாக ஊழியர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரைத் துறை அமைச்சர் மறுத்தபோதும், மக்களிடையே பீதியைப் போக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசி குறித்த சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் அரிசியை

பொதுமக்களே பின்வருமாறு சோதித்து கண்டுபிடிக்கலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தண்ணீர் சோதனை

நீர் நிரப்பப்பட்ட டம்ளரில் ஒரு தேக்கரண்டி அரிசியை விட்டு கலக்க வேண்டும். அரிசி டம்ளரின் அடியில் தங்கினால் உண்மையான அரிசி. மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி


பூஞ்சை சோதனை

நன்கு வேக வைக்கப்பட்ட அரிசியை, ஒரு பாட்டிலில் போட்டு மூன்று நாள்கள் மூடி வைக்க வேண்டும். மூன்று நாள்களுக்குப் பிறகு அதில் பூஞ்சைகள் காணப்படவில்லை என்றால் அது பிளாஸ்டிக் அரிசி.


சூடாக்கப்பட்ட எண்ணெய் சோதனை

சூடான எண்ணெயில் சில அரிசிகளைப் போட வேண்டும். அதில் அரிசி உருகி அடியில் தங்கினால் அதில் பிளாஸ்டிக் கலப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.


கொதிக்க வைக்கும் சோதனை

பாத்திரத்தில் அரிசியை கொதிக்க வைக்கும் போது, பாத்திரத்தின் மேல் அடர்த்தியான அடுக்கு உருவானால் அது பிளாஸ்டிக் அரிசி.


நெருப்புச் சோதனை

கொஞ்சம் அரிசியை எடுத்து நெருப்பில் காட்டுங்கள். அரிசி உடனடியாகப் பற்றி பிளாஸ்டிக் நெடியுடன் எரிந்தால், அது பிளாஸ்டிக் அரிசி என உறுதி செய்துகொள்ளலாம் என்கின்றனர் அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com