புதுவை, காரைக்காலில் தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் எஸ்எஸ்எல்சி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று புதன்கிழமை தொடங்கியது.
புதுவை, காரைக்காலில் தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் எஸ்எஸ்எல்சி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று புதன்கிழமை தொடங்கியது. மொத்தம் 17,572 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கி வரும் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 300 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 17,572 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 8946 மாணவர்களும் , 8626 மாணவிகளும் அடங்குவர்.
புதுச்சேரியில் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளராக 814 பேரும், காரைக்காலில் 161 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் செல்போன் உள்ளிட்ட மின்னனு பொருட்களை கொண்டுசெல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 50  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகளில் முறைகேடுகள்  நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் முதன்மை கல்வி அதிகாரியின் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட பறக்கும் படையும் , காரைக்காலில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்பார்வையில் ஒரு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது .
தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. மாணவ மாணவியர் தங்கள் பெயர் உள்ள அறிவிப்பு பலகைகளை ஆர்வமுடன் பார்த்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com