"நீட்' தேர்வுக் கட்டுப்பாடுகள் அவசியமானவை: இல.கணேசன்

மருத்துவத் துறைக்கு தரமான மருத்துவர்கள் கிடைக்க "நீட்' தேர்வுக் கட்டுப்பாடுகள் அவசியமானவை என பாஜக மூத்த தலைவரும்
"நீட்' தேர்வுக் கட்டுப்பாடுகள் அவசியமானவை: இல.கணேசன்

திருப்பரங்குன்றம்: மருத்துவத் துறைக்கு தரமான மருத்துவர்கள் கிடைக்க "நீட்' தேர்வுக் கட்டுப்பாடுகள் அவசியமானவை என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்தார்.

ராம்கோ நிறுவனர் ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்த நிலையை மாற்றி, தமிழக அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது. இதனை வரவேற்கிறேன். இதனால், பல மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றாலும், அதிக மதிப்பெண் பெறவில்லை என பெற்றோர்கள் குறை சொல்லும் நிலையும், அதனால் பல மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையும் மாறும்.  

'நீட்' தேர்வுக் கட்டுப்பாடுகள் அவசியமானவை. அதன் மூலம், மருத்துவத்துறைக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com