முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்கள் 10 பேர் சந்தித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஏம்எல்ஏக்கள் தங்களது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளையும் உடன் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக நேற்று தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 8 எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்த நிலையில் இன்று மேலும் 10 எம்எல்ஏக்கள் சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.