இரட்டை இலை சின்னம் எங்களுக்கே: ஓபிஎஸ்

இரட்டை இலை சின்னம் ஓரிரு நாளில் எங்களுக்கே கிடைக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே: ஓபிஎஸ்

இரட்டை இலை சின்னம் ஓரிரு நாளில் எங்களுக்கே கிடைக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி அருகே போடி விலக்கு பகுதியில் அரசு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் அவர் பேசியது:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று, 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் நீர்ப் பாசனத்திற்கு தீர்வு கண்டவர் ஜெயலலிதா. அவரது அறிவிப்புக்கு ஏற்ப எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காணப்படும் எழுச்சியை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அண்ணாவின் மறைவுக்குப்பின், தமிழகத்தில் நல்லாட்சி தருவார் என்ற எதிர்பார்பில் கருணாநிதியை முதல்வராக எம்.ஜி.ஆர்., அடையாளம் காட்டினார். ஆனால், அண்ணா தந்த ஆட்சியை குடும்ப ஆட்சியாக கருணாநிதி மாற்றினார். மேலும் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார். ஆனால், எம்.ஜி.ஆரை மக்கள் தங்களது இதய சிம்மாசனத்தில் அமர வைத்துக்கொண்டனர்.
அந்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கினார். எம்.ஜி.ஆர்., ஆட்சியின்போது பூனையாக இருந்த திமுக, அவரது மறைவுக்குப் பின் புலியாக மாற முயற்சித்தது. ஆனால், தற்போது மீண்டும் பூனையாகக்கூட முடியாமல் கலங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கு பொற்கால ஆட்சியை தந்த எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி நடத்திய ஜெயலலிதா, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு முன்னோடித் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினார். பல்வேறு சோதனைகளைக் கடந்து இயக்கத்தை கட்டிக் காத்தார்.
எந்த ஒரு குடும்பத்திற்குள்ளும் கட்சியையும், ஆட்சியையும் கொண்டு சேர்க்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விரும்பவில்லை. ஆனால், இந்த கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல சிலர் முயன்றனர். ஆட்சியை கைப்பற்றி விட திமுக கனவு கண்டது. ஆனால், நாங்கள் இணைந்த பின்பு அந்த கனவு முறியடிக்கப்பட்டு விட்டது. தற்போது இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிடும் கனவில் சிலர் பொய் சாட்சியை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர். ஆனால், ஓரிரு தினங்களில் இரட்டை இலை சின்னம் எங்கள் கைக்கு வந்து சேரும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com