ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.22,472-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சென்னையில் வியாழக்கிழமை விலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.2,809-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து 41 ரூபாய் 80 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.41,800 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
(ரூபாயில்- இத்துடன் ஜிஎஸ்டி
சேர்த்துக் கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,809
1 பவுன் தங்கம் 22,472
1 கிராம் வெள்ளி 41.80
1 கிலோ வெள்ளி 41,800