உதகையில் நவீன பாலகங்களை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

உதகையில் நவீன பாலகங்களை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். 

உதகையில் நவீன பாலகங்களை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். 

திறந்துவைத்து அவர் பேசுகையில், 

கடந்த திமுக ஆட்சியில் 25 லட்சமாக இருந்த பால் கொள்முதல், தற்போது 33 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நான்கு வழிச் சாலைகளிலும் நவீன பாலகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒருசில சுங்கச்சாவடிகளில் ஆவின் பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் 200 கல்லூரிகளில் ஆவின் பாலகங்கள் திறக்கப்பட உள்ளது. தற்போது 85 கல்லூரிகளில் இதற்கான பணி முடிவடைந்து பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் 200 கல்லூரிகளிலும் ஆவின் பாலகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 

ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி. ஜெயலலிதாவின் ஆன்மா எங்களைத் தொடர்ந்து வழிநடத்துவதால் இந்த ஆட்சி தொடரும். அதிமுக.,வில் ஸ்லீப்பர் செல் யாரும் இல்லை. இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சி சீராக நடைபெற்று வருவதால், அடுத்த 5 ஆண்டுகள் முழுவதுமாக இந்த ஆட்சி நிறைவுசெய்யும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com