அவினாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டம் அவினாசி குருண்டங்காடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தூக்கிட்டு....

திருப்பூர் மாவட்டம் அவினாசி குருண்டங்காடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவினாசி குருண்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சுதா கருங்காட்டுபுதூரில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்கு 11 மாதமே ஆன இரட்டைப் பெண் குழந்தைகள். கடந்த 2 நாட்களாக வீடு திறக்கப்படாததை கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து, வீட்டை திறந்து பார்க்கையில் நான்கு பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. 

இதையடுத்து, அவினாசி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் எதற்காக குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர் என்பதைக் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com