பெட்ரோல் டேங்கர் லாரி விபத்து: ரூ.7 லட்சம் மதிப்பிலான பெட்ரோல், டீசல் வீண்

ஊத்தங்கரை அருகே பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான பெட்ரோல், டீசல் வீணாயின

ஊத்தங்கரை அருகே பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான பெட்ரோல், டீசல் வீணாயின.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையோரத்தில் பரசனேரி உள்ளது. இந்த சாலை வழியாக வியாழக்கிழமை கரூர் பகுதியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்தது.
இதில் லாரி ஓட்டுநர் வேலூரைச் சேர்ந்த கன்னியப்பன் (59), லேசான காயத்துடன் தப்பினார். மேலும், மற்றொரு ஓட்டுநரான கரூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு (48), கால் முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்துக்குள்ளான லாரியில் 4,000 லிட்டர் பெட்ரோல், 8,000 லிட்டர் டீசல் ஏற்றி வந்திருந்தனர். விபத்தில் டேங்க் பழுதானதால் பெட்ரோல், டீசல் ஏரியில் கொட்டி வீணாயின.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி லாரி எஞ்ஜினை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தால் ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஊத்தங்கரை வட்டாட்சியர் சுப்பிரமணியம் மற்றும் போலீஸார் நேரில் சென்று பார்வையிட்டனர். ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com