வடகிழக்குப் பருவமழை: 4,399 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழையால் 4,399 பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

வடகிழக்குப் பருவமழையால் 4,399 பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிவிப்புகள்:
வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. மேலும், மிக பாதிப்புக்குள்ளாகும், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை அளிக்க மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் வருவாய், காவல், தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இடம்பெறுவர்.
பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள்: பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எவை எவை என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளன. மிக அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளாக 578 -ம், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 89 2-ம், மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் - 1206-ம், குறைந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 1723-ம் என தமிழகத்தில் மொத்தம் 4,399 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன,
ஒவ்வொரு பகுதிக்கும் குறைந்தது 10 பேர் வீதம் (பெண்கள் உட்பட) முதன்மை மீட்பாளர்கள் மொத்தம் 23,325 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் பெண் முதல்நிலை மீட்பாளர்கள் 6,740 பேர் ஆவர். முதல் நிலை மீட்பாளர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம், தீயணைப்பு துறை, காவல் துறை, தனியார் தொண்டு நிறுவனமான சத்ய சாய் பேரிடர் மீட்புக் குழு ஆகியோரால் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன என்று அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com