தமிழ்ச் சான்றோர் விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

உ.வே.சா. விருது உள்பட தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழ்ச் சான்றோர் விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
விருதுகளைப் பெற்ற தமிழ்ச் சான்றோர்களுடன் விருது வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
விருதுகளைப் பெற்ற தமிழ்ச் சான்றோர்களுடன் விருது வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

உ.வே.சா. விருது உள்பட தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழ்ச் சான்றோர் விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: கபிலர் விருதை முனைவர் இல.க. அக்னிபுத்திரனுக்கும் உ.வே.சா. விருதை முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணனுக்கும் கம்பர் விருதை இலங்கை ஜெயராஜூக்கும் சொல்லின் செல்வர் விருதை பி. மணிகண்டனுக்கும் ஜி.யு.போப் விருதை வைதேகி ஹெர்பார்ட்டுக்கும் (அவர் சார்பாக ஆறுமுகம் பெற்றார்) உமறுப்புலவர் விருதை பேராசிரியர் தி.மு. அப்துல் காதருக்கும் இளங்கோவடிகள் விருதை நா. நஞ்சுண்டனுக்கும் அம்மா இலக்கிய விருதை ஹம்சா தனகோபாலுக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
விருதுகள் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை அடங்கியது. 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் நாகலட்சுமி சண்முகம், அ. ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், வி. சைதன்யா, சி. முருகேசன், கு. பாலசுப்பிரமணியன், ச. ஆறுமுகம் பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் ஆகியோருக்கும் முதல்வர் பழனிசாமி அளித்தார்.
இந்த விருது தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியன அடங்கியது. 2015-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது செ. முரளி (எ) செல்வ முரளிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை அடங்கியது.
தமிழ்ச் செம்மல் விருதுகள்: 2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளும் மாவட்டத்துக்கு ஒருவருக்கு வழங்கப்பட்டன. வேம்பத்தூர் (எம்) கிருஷ்ணன் (சென்னை), முனைவர் மா.கி. இரமணன் (திருவள்ளூர்), கூ.மு. துரை (எ) கவிஞர் கூரம் துரை (காஞ்சிபுரம்), வி. பத்மநாபன் (எ) புலவர் வே. பதுமனார் (வேலூர்), ந. நாகராசன் (கிருஷ்ணகிரி), பா.இந்திரராசன் (திருவண்ணாமலை), கவிஞர் பெ. ஆராவமுதன் (விழுப்புரம்), முனைவர் அரங்க. பாரி (கடலூர்), செ. சுந்தரம் (எ) வெண்பாவூர் செ. சுந்தரம் (பெரம்பலூர்), முனைவர் ம. சோ. விக்டர் (அரியலூர்), கவிஞர் பி. வேலுசாமி (சேலம்), தகடூர் வனப்பிரியனார் (எ) கா. இராமச்சந்திரன் (தருமபுரி), புலவர் மா. சின்னு (நாமக்கல்), முனைவர் ச.சந்திரகுமாரி (ஈரோடு), ச. வரதசிகாமணி (கரூர்), முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் (கோவை), ஆ. முருகநாதன் (திருப்பூர்), மணி அர்ச்சுனன் (நீலகிரி), பேராசிரியர் தி.வெ. இராசேந்திரன் (திருச்சிராப்பள்ளி ), ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி (புதுக்கோட்டை), தி. அனந்தராமன் (சிவகங்கை), புலவர் தங்கராசு (தஞ்சாவூர்), வீ.இராமமூர்த்தி (திருவாரூர்), செ. செய்யது முகம்மது கலிபா சாகிப் (நாகப்பட்டினம்), ஜெகாதா (இராமநாதபுரம்), மறைந்த திருக்குறள் செம்மல் ந. மணிமொழியன் (மதுரை) சார்பாக அவரது மகள் மருத்துவர் அனுராதா கணேஷ், மா. பெரியசாமி (எ) தமிழ்ப் பெரியசாமி (திண்டுக்கல்), மறைந்த தமிழாசிரியர் திரு.ப. பாண்டியராசன் (தேனி) சார்பாக அவரது மகன் சண்முகராஜன், முனைவர் கா.இராமச்சந்திரன் (விருதுநகர்), முனைவர் கேப்டன் பா. வேலம்மாள் (திருநெல்வேலி), கா. அல்லிக்கண்ணன் (தூத்துக்குடி), முனைவர் சிவ. பத்மநாபன் (கன்னியாகுமரி) ஆகிய விருதாளர்களுக்குத் தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் சோ. ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் (பொறுப்பு) இரா. வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் கோ. விசயராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com