ஆர்.கே. நகர்: நடிகர் விஷால் மனு நிராகரிப்பு

சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிமுக, திமுக, தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன

சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிமுக, திமுக, தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனு உள்பட 70 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என மறுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்கள், தவறான குடியிருப்பு முகவரி உள்ளிட்ட காரணங்களால் மனு நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி அறிவித்தார். இதையடுத்து விஷால் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் வேட்பு மனு ஏற்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் பின் மீண்டும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com