ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை திறப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் திறந்துவைத்தார்.
சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன், (இடமிருந்து) ஆளுநரின் செயலர் ரமேஷ்சந்த் மீனா
சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன், (இடமிருந்து) ஆளுநரின் செயலர் ரமேஷ்சந்த் மீனா

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் திறந்துவைத்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்
கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்கு அடி உயரம், மூன்றரை அடி அகலம் கொண்ட திருவள்ளுவர் வெண்கலச் சிலையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்துப் பேசியதாவது:
ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒளவையார் சிலை விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த சிலைக்கு முன்பு இரண்டு ஒலி பெருக்கி இணைப்புடன் மின்னணு தொடு திரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் தாய் மொழியான 'அ' என்ற முதல் எழுத்தை முதன் முதலில் அட்சரம் போட்டு பார்ப்பது போல் தொடு திரையில் எழுத முடியும். பின்னர் ஒளவையாரின் ஆத்திச்சூடி அந்த திரையில் தெரிவதோடு ஒலியும் வரும். இது விரைவில் திறக்கப்
படவுள்ளது.
உலகில் பழமைவாய்ந்த செம்மொழிகளில் ஒன்று தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அன்றைய மக்களின் வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டும் வகையிலான பல இலக்கியங்கள் தமிழ் மொழியில் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இன்றைக்கு வாழும் மக்களுக்கும் பொருந்தக்கூடிய, பயன்தரக் கூடிய வகையில் படைக்கப்பட்டதுதான் திருக்குறள்.
திருக்குறள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மொழி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாத்தியப்படுத்த வேண்டும்.
இந்திய மொழிகளில் மட்டுமல்லால் ஐரோப்பிய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இதுவரை சுமார் 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வேத நூல்
களுக்கு சமமாகவே திருக்குறளும் கருதப்படுகிறது. ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த வாழ்க்கை முறை, அன்பு, பொறுமை, ஆட்சி முறை என அனைத்துக்குமான ஒரு வழிகாட்டி நூலாக திருக்குறள் அமைந்திருக்கிறது.
இந்த (ஆளுநர்) மாளிகையில் ரூ.3.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சூரிய மின் உற்பத்தித்திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 400 கிலோ வாட் மின் திறன் கொண்ட இந்த திட்டத்துக்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த மேலும் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆளுநர் மாளிகையின் மின்தேவை முழுவதையும் பூர்த்தி செய்ய முடியும் என்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய நீதிபதி எம்.கற்பக விநாயகம், ஆளுநர் மாளிகை வளாகத்தில் பாரதியார் சிலையையும் அமைக்க வேண்டும். திருவள்ளுவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தை உலகம், அன்பு, ஒழுக்கம், போன்றவை. அத்தகைய சிறப்புமிக்க திருவள்ளுவரின் திருக்குறளை நாம் படிப்பதோடு விட்டு விடாமல் வாழ்க்கையில் அனைவரும் அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழக அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com