ஆட்சிக் கலைப்பு கனவு நிறைவேறாது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என சிலர் தப்புக் கணக்கு போட்டு சேராதவர்களோடு சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களின் கனவு நிறைவேறாது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என சிலர் தப்புக் கணக்கு போட்டு சேராதவர்களோடு சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களின் கனவு நிறைவேறாது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) மாலை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது: அ.தி.மு.க., தொண்டர்கள் கழகத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர். அதனால்தான் எந்த சக்தியாலும், இந்த கோட்டையை நெருங்க முடியாது. நயவஞ்சகம் கொண்டவர்களால் இந்த அரசை அசைக்க முடியாது.
இந்த அரசைக் குறை கூறுபவர்கள், காலத்தின் சக்கரத்தில் சிக்கி அழிவார்கள். இந்த கழகம், 1.50 கோடி தொண்டர்களின் இதயங்களைக் கொண்டு கட்டப்பட்ட எஃக்கு கோட்டை. நோக்கம் துôய்மையாகவும், விவேகம் நிறைந்ததாகவும் இருந்துவிட்டால், எதை நினைத்தும், யாரை நினைத்தும் அச்சப்படத் தேவையில்லை. நமக்கு தண்டனை என நினைத்து பிறர் செய்யும் தீங்கைக்கூட, நமக்கான வாய்ப்பாக மாற்றிவிட முடியும்.
நம்மை நோக்கி வீசப்படும் கற்களைக்கூட, நமக்கான படிக்கட்டுகளாக மாற்ற முடியும். இதற்கு முன் யார் ஆட்சியாளர்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும். குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மக்களைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடையாது.
ஒரு சிலர் புறப்பட்டு விட்டனர். இந்த ஆட்சியைக் கலைத்துவிடலாம், கட்சியை உடைத்து விடலாம் என எண்ணுகின்றனர். அவர்கள் காண்பது எல்லாம் பகல் கனவு. ஒரு காலும் முடியாது. இங்கு அமர்ந்திருக்கின்ற தொண்டன் இருக்கும் வரை, இந்த இயக்கத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.
நாங்கள் நம்புவது, முன்னே உட்கார்த்திருக்கிற தொண்டர்களையும், பொதுமக்களையும்தான். ஆனால், ஒரு சிலர் தி.மு.க.வை நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்துவிடலாம் என தப்புக் கணக்கு போட்டு, சேராதவர்களோடு சேர்ந்துள்ளனர்.
யார் தீய சக்தி, யாரோடு சேரக் கூடாது என எம்.ஜி.ஆர். கூறினாரோ, அவர்களோடு சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு, ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பான். ஆண்டவன் என்பது ஜெயலலிதா, அவர்களுக்கு தக்க தண்டனை கொடுப்பார்கள். 
14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தது திமுக. ஆனால், தமிழக மக்களுக்காக என்ன செய்தது? இப்போது தமிழக மக்களுக்கான திட்டங்களை பெற நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்கிறோம். இதனைக் குறை கூற தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com