ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்: திமுகவினர் கைது

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பாட்டைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய திமுகவினர் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி புதன்கிழமை திமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன், நடிகர் வாகை சந்திரசேகர்
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி புதன்கிழமை திமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன், நடிகர் வாகை சந்திரசேகர்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பாட்டைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய திமுகவினர் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொதிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் நடவடிக்கை தமிழகத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெறுவதுபோல இருப்பதாக குற்றம்சாட்டி திமுகவினர் புதன்கிழமை திடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
இதற்காக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்று கூடினர்.
பேரணி: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், மாணவிகள் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அதன்பின், அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர். ஆனால், தடுப்பு அரண்கள் அமைத்து போலீஸார்கள் அவர்களைச் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பதற்றமான சூழல் உருவாகியது. அதைத் தொடர்ந்து திமுகவினர் அனைவரையும் போலீஸார் கைது செய்து, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்: அதைப்போல தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து பேரணியாகச் சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com